வாட்ஸ்அப்பில் மொழி பெயர்ப்பு வசதி.. எத்தனை மொழிகளில் கிடைக்கும்? எப்படி உபயோகிப்பது? முழு விவரம்!

Translation feature on WhatsApp: மெட்டா வாட்ஸ்அப்பில் மொழிபெயர்ப்பு அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது.

Published on: September 24, 2025 at 10:45 am

3 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களிடையே பல்வேறு மொழி அரட்டைகளை எளிதாக்கும் நோக்கில், மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் தனது வாட்ஸ்அப் செய்தி சேவைக்கு மொழிபெயர்ப்பு அம்சத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

எத்தனை மொழிகளில் கிடைக்கும்?

இந்த மொழிபெயர்ப்புகள் ஆரம்பத்தில் ஆண்ட்ராய்டு சாதனங்களில் ஆறு மொழிகளிலும், ஐபோன்களில் 19 மொழிகளிலும் கிடைக்கும், அதைத் தொடர்ந்து மேலும் பல மொழிகள் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மெட்டா தனது அறிக்கையில், “உங்கள் அரட்டைகளின் தனியுரிமையைப் பாதுகாக்க செய்தி மொழிபெயர்ப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எப்படி பயன்படுத்துவது?

இதில், பயனர்கள் ஒரு செய்தியை நீண்ட நேரம் அழுத்தி மொழிபெயர் என்பதைத் கிளிக் செய்வதன் மூலம் வேறு மொழியில் எந்த செய்தியையும் பார்க்கலாம்.
இந்த அம்சம் தனிப்பட்ட மற்றும் குழு அரட்டைகளுக்கும், சேனல் புதுப்பிப்புகளிலும் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு பயனர்கள் முழு அரட்டை தொடருக்கும் தானியங்கி மொழிபெயர்ப்பை இயக்கலாம், இதனால் எதிர்கால செய்திகள் இயல்பாகவே மொழிபெயர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : டச் ஸ்கீரின் கார்கள் ஆபத்தானவைகளா? உண்மை என்ன?

நாகப்பட்டினத்தில் நிதி மற்றும் இணைய மோசடி விழிப்புணர்வு நிகழ்ச்சி: பஜாஜ் ஃபைனான்ஸ் ஏற்பாடு
Cyber Fraud Awareness Programme

நாகப்பட்டினத்தில் நிதி மற்றும் இணைய மோசடி விழிப்புணர்வு நிகழ்ச்சி: பஜாஜ் ஃபைனான்ஸ் ஏற்பாடு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர்

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com