Apple iPhone 17 sale in India: மும்பை பந்த்ராவில் ஐபோன் 17 சீரிஸ் வாங்க கூடிய கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Apple iPhone 17 sale in India: மும்பை பந்த்ராவில் ஐபோன் 17 சீரிஸ் வாங்க கூடிய கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Published on: September 19, 2025 at 1:08 pm
மும்பை, செப்.19, 2025: மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள நிறுவனத்தின் முதன்மைக் கடைக்கு வெளியே, வெள்ளிக்கிழமை (செப்.19, 2025) ஐபோன் 17 சீரிஸ் பெற நூற்றுக்கணக்கான ஆப்பிள் ஆர்வலர்கள் வரிசையில் நின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது, மும்பை கடையின் வெளியே ஒரு பெரிய கூட்டம் கூடியது, திறப்பு நேரத்திற்கு முன்பே வரிசைகள் உருவாகின. இதில், சுவாரஸ்யம் என்னவென்றால், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சாதனங்களை முதலில் வாங்க ஆர்வமாக இருந்த பலர் சூரிய உதயத்திற்கு முன்பே வரிசையில் நின்றனர்.
6 மாத காலம் காத்திருப்பு
VIDEO | Mumbai: People flock to Apple Store in Bandra Kurla Complex for the launch of iPhone 17 series phones.
— Press Trust of India (@PTI_News) September 19, 2025
Apple unveiled the iPhone 17 series in the price range of Rs 82,900 to Rs 2,29,900, which will be available in India starting from September 19 onwards for customers… pic.twitter.com/ZbVNJQIhmR
(நன்றி. பி.டி.ஐ)
அதாவது, வாடிக்கையாளர்கள் அதிகாலையில் இருந்தே ஆப்பிள் ஐபோன் வாங்க பொறுமையுடன் காத்திருந்தனர். இது குறித்து பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் ஒருவர் பேசுகையில், “நான் அதிகாலை 3 மணி முதல் வரிசையில் நின்று கொண்டிருந்தேன். நான் ஜோகேஸ்வரியிலிருந்து இங்கு வந்துள்ளேன். நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். கடந்த ஆறு மாதங்களாக இந்த போனுக்காக காத்திருக்கிறேன்” என்றார்.
#WATCH | Long queues seen outside the Apple store in Delhi's Saket
— ANI (@ANI) September 19, 2025
Apple started its iPhone 17 series sale in India today. pic.twitter.com/mjxZAFheWC
நன்றி (ஏ.என்.ஐ)
இதேபோல் டெல்லி சாகேத்தில் உள்ள கடையில் ஐபோன் வாங்க, ஐபோன் ஆர்வலர்கள் காலை முதலே குவிந்த வண்ணம் காணப்பட்டனர்.
இதையும் படிங்க :ஜூம் விண்டோஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கடும் எச்சரிக்கை.. ஏன்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com