VCK MP Ravikumar: தமிழ்நாடு அரசு சாதியவாதிகளிடம் தோற்பது ஏன் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி, ரவிக்குமார் கேள்வி எழுப்புகிறார்.
VCK MP Ravikumar: தமிழ்நாடு அரசு சாதியவாதிகளிடம் தோற்பது ஏன் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி, ரவிக்குமார் கேள்வி எழுப்புகிறார்.
Published on: April 17, 2025 at 7:55 pm
சென்னை ஏப்ரல் 17 2025: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.பி முனைவர் ரவிக்குமார் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் தமிழ்நாடு அரசுக்கு கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார். அந்த கேள்வியில், “சனாதன வாதிகளை எதிர்ப்பதில் வெற்றி காணும் தமிழ்நாடு, சாதியவாதிகளிடம் ஏன் தோற்றுப் போகிறது? என கேட்டுள்ளார்.
நாங்குநேரி மாணவர் சின்னத்துரை மீண்டும் தாக்கப்பட்டதை நினைவில் கொண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம் பி இந்த கேள்வியை எழுப்பி உள்ளார் என கூறப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த மாணவர் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு கொடூரமாக தாக்கப்பட்டார். இந்த நிலையில் திருநெல்வேலி கொக்கிரகுளம் அருகே மாணவர் சின்னத்துரை மீண்டும் தாக்கப்பட்டார்.
சனாதனவாதிகளை எதிர்ப்பதில் வெற்றி காணும் தமிழ்நாடு அரசு சாதியவாதிகளிடம் ஏன் தோற்றுப் போகிறது?
— Dr D.Ravikumar (@WriterRavikumar) April 17, 2025
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில், சின்னத்துரையிடம் instagramல் பழகி திருநெல்வேலி கொக்காரகுளம் அருகே அவரைத் தாக்கி பணத்தை பறித்து சென்றது தெரிய வந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலுக்கு உள்ளான மாணவர் சின்னத்துரை தற்போது திருநெல்வேலியில் உள்ள ஒரு கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அதிமுக, பாஜக கூட்டணியின் நோக்கம் இதுதான்; மனம் திறந்து பேசிய நயினார் நாகேந்திரன்.!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com