VKC leader Thol Thirumavalavan MP: பாரதிய ஜனதா கட்சியின் டாஸ்மாக்கு எதிரான போராட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம் என பேசி உள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்பியுமான தொல் திருமாவளவன்.
VKC leader Thol Thirumavalavan MP: பாரதிய ஜனதா கட்சியின் டாஸ்மாக்கு எதிரான போராட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம் என பேசி உள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்பியுமான தொல் திருமாவளவன்.
Published on: March 17, 2025 at 1:16 pm
Updated on: March 17, 2025 at 1:38 pm
சென்னை, மார்ச் 17, 2025:விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், கடலூர் மக்களவை எம்பியுமான தொல் திருமாவளவன் சென்னையில் இன்று (மார்ச் 17 2025) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாரதிய ஜனதா கட்சியின் டாஸ்மாக்கு எதிரான போராட்டத்தை அவர் வரவேற்றார். தொடர்ந்து சாராயக்கடைகள் மூடப்பட வேண்டும் சாராயம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு என்றார்.
முன்னதாக தமிழக மீனவர்களின் பிரச்சனை குறித்து தமிழக அமைச்சரிடம் பேச உள்ளதாகவும் தொல் திருமாவளவன் தெரிவித்தார். “தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர். இந்த விவகாரம் குறித்து தமிழக அமைச்சர்களிடம் பேச உள்ளோம். இன்னும் இரு வாரங்களில் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்” என்றார்.
தொடர்ந்து, டாஸ்மாக்கு எதிரான போராட்டங்களை வரவேற்ற தொல் திருமாவளவன், சாராயம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு என்றார். மேலும் இந்த நிலைப்பாட்டிற்காக குரல் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் நாங்கள் வரவேற்போம்; ஆனால் அவர்கள் அரசியல் காரணங்களுக்காக, அரசுக்கு நெருக்கடி கொடுக்கின்ற ஒரு யுக்தியாக அவர்கள் இதை கையாளுவார்கள் என்றால் இதில் அவர்களுக்கு எந்தவித முன்னேற்றமும் இருக்காது.
பாரதியார் ஜனதா கட்சியை ஆளுகின்ற மாநிலங்களில் அவர்கள் மது ஒழிப்பு கொள்கையை நடைமுறைப்படுத்துகிறார்களா என்ற கேள்வியும் மறுபுறம் எழுகிறது. பாஜக ஆளுகின்ற மாநிலங்களிலும் மது ஒழிப்பை பாஜக முன்னிறுத்தினால் அதை நாம் ஆதரிப்போம், முழு மனதோடு பாராட்டலாம்” என்றார்.
நாங்கள் கூட்டணி கட்சியாக இருந்தாலும் தேர்தல் அறிக்கையில் திமுக அறிவித்தது போல் மது ஒழிப்பு கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும் அந்த கொள்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் தோழமைக் கட்சியான எங்களின் நிலைப்பாடும்” என்றார்.
இதையும் படிங்க டாஸ்மாகில் ரூ.1000 கோடி தான் முறைகேடா? சீமான் பரபரப்பு கேள்வி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com