Vijays campaign vehicle seized : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜயின் பரப்புரை வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்ய வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
Vijays campaign vehicle seized : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜயின் பரப்புரை வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்ய வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
Published on: October 4, 2025 at 10:03 pm
சென்னை, அக்.4, 2025: நடிகர்- தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பரப்புரை வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.தமிழக வெற்றிக் கழக பேரணியின் போது கரூரில் 41 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி செந்தில்குமார், “விஜய் பரப்புரை வாகனத்தை பறிமுதல் செய்யாதது ஏன்? எனக் கேள்வியெழுப்பி இருந்தார்.மேலும், அரசியல் பேரணிகளுக்கு தடை விதித்தார்.
தொடர்ந்து, கரூர் துயரம் தொடர்பான விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழுவையும் அமைத்தார்.இந்த நிலையில் நடிகர் விஜய்யின் பரப்புரை வாகனத்தை நாமக்கல் போலீசார் பறிமுதல் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் பரப்புரை வாகனத்தின் மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்து நாமக்கல் மாவட்ட காவல்துறை எல்லைக்குள் வருகிறதாம். இதைத் தொடர்ந்து, நாமக்கல் போலீசார் இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : நடிகர் விஜய்க்கு இசட் பிரிவு பாதுகாப்பா? உள்துறை அமைச்சகம் விளக்கம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com