Vijay slams Stalin: தமிழக வெற்றிக் கழகத்தின் பேரணி நடைபெற இடத்தில், அக்கட்சியின் தொண்டர் ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
Vijay slams Stalin: தமிழக வெற்றிக் கழகத்தின் பேரணி நடைபெற இடத்தில், அக்கட்சியின் தொண்டர் ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

Published on: February 13, 2026 at 7:37 pm
சேலம், பிப்.13, 2026: வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டின் சேலத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பேரணியில் கலந்து கொண்ட தொண்டர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் என ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, புதிய தலைமுறை உள்ளிட்ட உள்ளூர் தமிழ் சேனல்களில் த.வெ.க. தொண்டர் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என செய்திகள் வெளியாகி இருந்தன.
மகாராஷ்டிராவை சேர்ந்தவர்….
இதற்கிடையில், “சேலத்தில் இன்று நடைபெற்ற அரசியல் கூட்டத்தின் போது மகாராஷ்டிராவைச் சேர்ந்த 37 வயது நபர் மாரடைப்பால் இறந்ததாகக் கூறப்படுகிறது. இறந்தவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சூரஜ் (37) என அடையாளம் காணப்பட்டுள்ளார்” எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விசில் சின்னத்துக்கு வாக்களியுங்கள்..
சேலம் பேரணியில் விஜய் ஸ்டாலினை கடுமையாக சாடினார். அப்போது, வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களில் “விசில்” சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களை வலியுறுத்தினார்.
மேலும், “மற்ற கட்சிகளிடமிருந்து வழங்கப்படும் பணத்தை நிராகரிக்க வேண்டாம் என்றும் வாக்காளர்களிடம் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு. பிப்.12 தி.மு.க. ஆர்ப்பாட்டம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com