Assembly Election 2026: “எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனில் திமுக கூட்டணியுடன் தொடர்வது குறித்து மறுபரிசீலனை செய்வோம் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம் எல் ஏ தெரிவித்துள்ளார்.
Assembly Election 2026: “எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனில் திமுக கூட்டணியுடன் தொடர்வது குறித்து மறுபரிசீலனை செய்வோம் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம் எல் ஏ தெரிவித்துள்ளார்.

Published on: March 15, 2026 at 3:07 pm
சென்னை மார்ச் 15, 2026; தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது; இந்த நிலையில் கூட்டணி தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம் எல் ஏ, தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து பேசிய அவர், ” எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் திமுக கூட்டணியில் தொடர்வது குறித்து மறுபரிசீலனை செய்வோம்” என்ன அதிரடியாக அறிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” வன்னியர் சமூக மக்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கைகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இடம் கொடுத்துள்ளோம். மேலும் எங்களைப் பொறுத்தவரை எங்களுக்கு கூடுதல் தொகுதிகள் என்பது முக்கியமல்ல; மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட விரும்பினோம். கடலூரில் மேயர் சீட் கேட்டோம். இதையெல்லாம் அவர்கள் எங்களுக்கு தரவில்லை.
இன்று மாலை மீண்டும் ஆலோசனை
எங்களைப் பொறுத்தவரை எங்களது கோரிக்கைகளை முழுமையாக திமுகவுடன் அளித்துள்ளோம்; திமுக கொடுக்கும் பதிலை பொறுத்து நாங்கள் அடுத்த கட்ட முடிவுகளை எடுப்போம். திமுக எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரும் கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி அமைக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளோம். இது தொடர்பாக இன்று மாலை கட்சி நிர்வாகிகளுடன் நாங்கள் ஆலோசிக்க உள்ளோம்; திமுகவின் பதிலை பொறுத்து நாங்கள் முடிவு எடுப்போம். கட்சியில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் எனக்கு தரப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க; தமிழக மக்களை காப்பதற்காக கூடுதலாக 3 தொகுதிகளை வாங்கி உள்ளோம்.. காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வ பெருந்தகை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com