Karunanidhi’s statue in Salem: சேலத்தில் கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயிண்ட் ஊற்றப்பட்ட சம்பவத்துக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
Karunanidhi’s statue in Salem: சேலத்தில் கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயிண்ட் ஊற்றப்பட்ட சம்பவத்துக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
Published on: July 15, 2025 at 3:37 pm
சென்னை, ஜூலை 15 2025: சேலத்தில் கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயிண்ட் வீசப்பட்ட சம்வத்துக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் அண்ணா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் சிலை மீது சமூக விரோதிகள் கருப்பு பெயிண்ட் பூசி அவமதிப்பு செய்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது.
தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் கருத்தியல் ரீதியாக மோத முடியாத சக்திகள், தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்களின் சிலைகளை அவமதிப்பதும்,
உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர் சிலைக்கு காவி வண்ணம் பூசுவதும், தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தின் அரசியல் பண்பாட்டை சிதைத்து அமைதியை சீர்குலைக்க முயலும் இத்தகைய சக்திகளை கண்டறிந்து கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ப வடிவ இருக்கை இருக்கட்டும்; அன்புமணி எழுப்பிய முக்கிய கேள்வி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com