Udhayanidhi Stalin: “சங்கி கூட்டம் இனி 10 நாட்கள் தூங்காது” என திமுகவின் மகளிர் அணி மாநாட்டில், துணை முதலமைச்சர் உதயநிதி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Udhayanidhi Stalin: “சங்கி கூட்டம் இனி 10 நாட்கள் தூங்காது” என திமுகவின் மகளிர் அணி மாநாட்டில், துணை முதலமைச்சர் உதயநிதி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Published on: December 29, 2025 at 11:24 pm
திருப்பூர் ,டிச. 29, 2025: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காரணம் பேட்டையில் திமுக வின் மகளிர் அணி மாநாடு இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமை தாங்கினார்.
‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற தலைப்பில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், திருச்சி சிவா, டி.ஆர் பாலு, ஆ.ராசா மற்றும் செந்தில் பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உதயநிதி பரபரப்பு பேச்சு
திமுக மகளிர் அணி கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி, ” திமுகவின் இந்த மகளிர் அணி மாநாட்டை பார்த்து சங்கி கூட்டம் அடுத்த 10 நாட்களுக்கு தூங்கப் போவது இல்லை; சங்கி கூட்டம் புலம்புகிறது, அடிமை கூட்டம் பதறுகிறது.
இந்த மாநாடு மிகுந்த எழுச்சியோடு நடைபெறுகிறது. செந்தில் பாலாஜி மற்றும் கனிமொழிக்கு வாழ்த்துக்கள்” என்றார்.
அமித் ஷாவுக்கு பதில்
தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், ” அடுத்த இலக்கு தமிழ்நாடு தான் என்கிறார் அமித்ஷா; சுயமரியாதை கொண்ட இந்த தமிழ் மகளிர் கூட்டம் இருக்கும் வரை உங்களால் தமிழ்நாட்டுக்குள் நுழையவே முடியாது” என்றார்.
மேலும் பாசிச கூட்டத்திற்கு சலாம் போட்டு தமிழ்நாட்டை திறந்து விட நாங்கள் ஒன்றும் அதிமுக கிடையாது என்றும் உதயநிதி விமர்சித்தார்.
அதிமுக மீது விமர்சனம்
நாங்கள் தேர்தல் குழு அமைத்தோம்; எங்களைப் பார்த்து அதிமுகவும் தேர்தல் குழு அமைத்துள்ளது. எங்களது தேர்தல் அறிக்கையை அவர்கள் காப்பி பேஸ்ட் செய்வார்கள்; எனினும் அவர்களை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்” என்றார்.
இதையும் படிங்க: பா.ம.க அன்புமணிக்கு சொந்தமானது அல்ல.. ஜி.கே. மணி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com