தமிழ்நாட்டில் பெரியாரை தாண்டி அரசியல் செய்ய முடியாது என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பெரியாரை தாண்டி அரசியல் செய்ய முடியாது என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Published on: September 18, 2024 at 11:31 pm
Udhayanidhi stalin | நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் (TVK) என்ற கட்சியை தொடங்கி நடத்திவருகிறார். இந்த நிலையில் செப்.17ஆம் தேதி தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பெரியார் திராவிடர் கழகம் தலைமையகம் வந்தார்.
அங்குள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர்கள் சூடி சென்றார். நடிகர் விஜய், பெரியாருக்கு மாலை சூட்டியது தமிழ்நாட்டில் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மற்ற தலைவர்களுக்கும் நடிகர் விஜய் மரியாதை செலுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ் தேசியம் பெரியாரை எதிரியாக பார்க்கவில்லை; அவரை தலைவராகவும் ஏற்கவில்லை” என்றார்.
இந்த நிலையில் இது தொடர்பாக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த அவர், “நண்பர் விஜய்க்கு வாழ்த்துகள்” என்றார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி, “யாராக இருந்தாலும் தமிழ்நாட்டில் பெரியாரை தாண்டி, பெரியாரை மீறி, பெரியாரை தொடாமல் அரசியல் செய்ய முடியாது” என்றார்.
இதையும் படிங்க : 18,626 பக்க அறிக்கை; ஒரே நாடு ஒரே தேர்தல்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com