Udhayanidhi Stalin | தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (செப்.29, 2024) துணை முதலமைச்சராக பதவியேற்கிறார். இந்த நிலையில் தமிழக அமைச்சரவையிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
மனோ தங்கராஜ் விடுவிப்பு
அமைச்சர்களாக இருந்த மனோ தங்கராஜ், கே.எஸ் மஸ்தான், ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், செந்தில் பாலாஜி, கோவி செழியன், ராஜேந்திரன், எஸ்.எம் நாசர் ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
பொன்முடிக்கு இலாகா மாற்றம்
இந்த நிலையில் உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு வனத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த மெய்யநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும், வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன் ஆதி திராவிடர் நலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேபோல், ஆதித் திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன், பால்வளத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு நிதி மற்றும் சுற்றுச்சூழல் துழந ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க
“நாடாளுமன்றத்தில் மென்மையாக பேசக்கூடாது; கடுமையாகப் பேச வேண்டும்” என மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்….
நாகூர் தர்கா கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவுக்கு, 45 கிலோ சந்தனக் கட்டைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்….
M K Stalin | தமிழ்நாட்டில் 2026ல் மீண்டும் தி.மு.க ஆட்சிதான் என மு.க. ஸ்டாலின் உறுதியாக கூறினார்….
M K Stalin Criticized Vijay | தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின், த.வெ.க தலைவர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்துள்ளார்….
M K Stalin | தமிழக மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்