பிராமண எதிர்ப்பு காலாவதி கொள்கை.. மயிலாப்பூர் த.வெ.க வேட்பாளர் வெங்கட்ரமணன்!

TVK Treasurer P Venkataramanan : பிராமண எதிர்ப்பு காலாவதியான கொள்கை என தமிழக வெற்றிக் கழகத்தின் பொருளாளர் பி. வெங்கட்ரமணன் விமர்சித்துள்ளார்.

Published on: April 9, 2026 at 7:12 pm

சென்னை, ஏப்.9, 2026: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளவர் வெங்கட் ரமணன். இவர் கட்சியின் பொருளாளரும் ஆவார். இந்நிலையில், வெங்கட் ரமணன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “பிராமண எதிர்ப்பு காலாவதியான கொள்கை” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, திராவிட கட்சிகளுக்க மாற்றாக தமிழக வெற்றிக் கழகத்திடம் என்ன திட்டம் உள்ளது என்ற கேள்விக்கு, “மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் நேர்மையை விரும்புகிறார்கள். பல தசாப்தங்களாக, ஒரு சில குடும்பங்களே இந்த மாநிலத்தை ஆட்சி செய்து வருகின்றன. வாக்காளர்கள் இதனால் சலிப்படைந்துள்ளனர்” என்றார்.

மேலும், “இன்றைய சூழலில் இளைஞர்கள் கல்வி அறிவு பெற்றவர்களாகவும், பெண்கள் மிகுந்த விழிப்புணர்வு கொண்டவர்களாகவும் உள்ளனர். பழைய பாணியிலான அரசியல் முறை, நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் உலகிற்குச் சற்றும் பொருத்தமாக இல்லை. அந்த இடைவெளியை தமிழக வெற்றிக் கழகம் நிரப்ப முயன்று வருகிறது” என்றார்.

பார்பனியம் பற்றி பேசுகையில், “’பார்ப்பனியம்’ என்பது, ஒரு சிலர் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி அவர்களைப் பாகுபாட்டுடன் நடத்தும் சூழலைக் குறிப்பதாகும். இது வெறும் பார்ப்பன சமூகத்தைச் சார்ந்த விஷயம் மட்டுமல்ல” என்றார். மேலும், பிராமண எதிர்ப்பு காலாவதி கொள்கை எனவும் அவர் கூறினார்.

வாக்குப்பதிவு

தமிழ்நாட்டில் ஏப்.23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் பதிவான வாக்குகள் மே மாதம் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதையும் படிங்க: கோவை வந்த போதிலும் பரப்புரை மேற்கொள்ளாத ராகுல்.. சிக்கலை எதிர்கொள்ளும் காங்கிரஸ்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com