Karur Stampede Probe: தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா மற்றும் நிர்மல் குமார் உள்ளிட்டோர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்கள்.
Karur Stampede Probe: தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா மற்றும் நிர்மல் குமார் உள்ளிட்டோர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்கள்.

Published on: December 29, 2025 at 12:40 am
Updated on: December 29, 2025 at 5:40 pm
டெல்லி, டிச.29, 2025: 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதியன்று தமிழ்நாட்டின் கரூரில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான நெரிசல் விபத்தில் சிக்கி, குழந்தைகள், பெண்கள் என 41 பேர் தங்களின் இன்னுயிரை இழந்தனர்.
இந்நிகழ்வில், சுமார் 100 பேர் காயமடைந்தனர். இது, பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் போதிய அளவில் இல்லாததால் ஏற்பட்ட மிகப்பெரிய தவறாக இது கருதப்படுகிறது.
மேலும், இந்தச் சம்பவம், பெரிய அளவிலான கூட்டங்களை நடத்தும்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வளவு அவசியம் என்பதையும் வலியுறுத்தியது.
சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜர்
இந்த நிலையில் இது தொடர்பான விசாரணை சி.பி.ஐ அதிகாரிகள் நடத்திவருகின்றனர். இந்த நிலையில், டெல்லி சி.பி.ஐ அலுவலகத்தில் த.வெக.க நிர்வாகிகள் இன்று (திங்கள்கிழமை) ஆஜரானார்கள்.
இது தொடர்பான விசாரணைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி என் ஆனந்த், கட்சியின் தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் மற்றும் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் ஆஜரானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : வீடியோ: தளபதியை சுற்றுப்போட்ட ரசிகர்கள்.. தடுமாறி விழுந்த விஜய்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com