மறைந்த அரசியல் தலைவர் ஜி.கே. மூப்பனாருக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த அரசியல் தலைவர் ஜி.கே. மூப்பனாருக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அஞ்சலி செலுத்தினார்.
Published on: August 30, 2024 at 10:11 am
GK Moopanar | பழம்பெரும் காங்கிரஸ் தலைவரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனருமான மறைந்த ஜி.கே. மூப்பனாரின் நினைவு தினம் இன்று (ஆக.30, 2024) அனுசரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் அவரை நினைவுக் கூர்ந்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், “அறம் சார்ந்த அரசியலில் அழுத்தமான நம்பிக்கை ” என அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் டி.டி.வி தினகரன், “அறம் சார்ந்த அரசியலில் அழுத்தமான நம்பிக்கை கொண்டிருந்த தனித்துவமிக்க தலைவராகவும், சமூக நலன் சார்ந்த சிந்தனை மிக்க அரசியல் ஆளுமையாக திகழ்ந்தவருமான ஐயா ஜி.கே. மூப்பனார் அவர்களின் நினைவுதினம் இன்று.
எளிமையான வாழ்க்கை, நேர்மையான அரசியலின் மூலம் மாநில அரசியல் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் மிகப்பெரிய உயரங்களை எட்டிய ஐயா ஜி.கே.மூப்பனார் அவர்களின் நினைவுநாளில் அவர் ஆற்றிய மக்கள் சேவைகளை நினைவில் கொண்டு போற்றுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : மாமன்னர் பூலித்தேவன் ஜெயந்தி: நெல்கட்டான்செவல் வருகிறார் டி.டி.வி தினகரன்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com