TTV Dhinakaran: வாக்காளர் சிறப்பு திருத்த வரைவு பட்டியல் வெளியாகி உள்ள நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
TTV Dhinakaran: வாக்காளர் சிறப்பு திருத்த வரைவு பட்டியல் வெளியாகி உள்ள நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

Published on: December 20, 2025 at 11:25 am
சென்னை டிசம்பர் 20, 2025; தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது; இந்த நிலையில் வாக்காளர் வரைவு பட்டியல் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19, 2025) வெளியானது. இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது கட்சியை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில்,”2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளின் (SIR) அடிப்படையில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்டம் மற்றும் தொகுதிவாரியாக இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்கள், தங்களின் பெயர்களை மீண்டும் இணைக்க, புதிய வாக்காளர்களைச் சேர்க்க, திருத்தப் பணிகளை மேற்கொள்ள வரும் ஜனவரி 18 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், அவரவர் தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியலை முழுமையாகப் பெற்று, தங்களின் பகுதிகளில் தகுதி வாய்ந்த வாக்காளர்கள் எவரேனும் விடுபட்டிருந்தால் அவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்கும், புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கும் அனைத்து விதமான உதவிகளையும் உடனிருந்து செய்திட வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க; வேளாண் துறை வீழ்ச்சி.. கொண்டாட்டம்நடத்தும் மோசடி திமுக அரசின் பதில் என்ன? அன்புமணி ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com