சென்னை, ஜன.31, 2026: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் தலைவர் டி.டி.வி தினகரன் சனிக்கிழமை (ஜன.31, 2026) விடுத்துள்ள அறிக்கையில், “தமிழும், தமிழ் கலாச்சாரமும் அழிய தமிழ் நில மன்னர்கள் தான் காரணமா?” என வி.சி.க தலைவர் தொல். திருமாவளவனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அறிக்கையில் மேலும் டி.டி.வி தினகரன், “தமிழ் அழிவதற்கும், தமிழ் கலாச்சாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் திரு தொல்.திருமாவளவன் அவர்கள் பேசியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் வருத்தமளிக்கிறது.
தமிழர்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டுக் கலாச்சாரத்தையும் போற்றிப் பாதுகாத்து, வீரத்தின் விளைநிலமாக தமிழகத்தை மாற்றி இன்றளவும் தெய்வங்களுக்கு இணையாகப் போற்றப்படும் தமிழ்நில மன்னர்கள் குறித்த திரு.தொல்.திருமாவளவன் அவர்களின் அரைவேக்காட்டுத்தனமான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ‘ராஜராஜன் தமிழ்ப் பெயரா? ராஜேந்திரன் தமிழ்ப் பெயரா? என பொதுவெளியில் கேள்வி எழுப்பும் திரு தொல்.திருமாவளவன் அவர்கள், முன்னாள் முதலமைச்சர் திரு.கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பெயர்கள் தமிழ்ப்பெயரா? என கேட்கும் தைரியமும், துணிச்சலும் இருக்கிறதா? என்ற கேள்வி தமிழர்கள் அனைவரின் மத்தியிலும் இந்நேரத்தில் எழுந்திருக்கிறது.
எனவே, திமுகவையும், அதன் தலைவர்களையும் திருப்திப்படுத்துவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நில மன்னர்கள் மீது அவதூறுகளை அள்ளிவீசுவதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல்.திருமாவளவன் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கணவன் அல்ல ‘monster’.. 27 வயது பெண் போலீஸ் கொடூரக் கொலை!
Chennai Acid Attack : சென்னையில் திராவகம் வீச்சுக்குள்ளான பெண் பகுதி பார்வையை இழந்து உயிருக்கு போராடி வருகிறார்….
2026 Tamil Nadu Legislative Assembly elections: திமுக கூட்டணியில், இந்திய கம்யூனிஸ்ட் ஐந்து இடங்களில் போட்டியிடுகிறது; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்கள் குறித்த விவரங்கள்…
Assembly Election 2026: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகள் வரை கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது….
Puducherry Legislative Assembly Election 2026: புதுச்சேரியில் தி.மு.க, காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு எட்டப்படாத நிலையில், தி.மு.க.வினர் வேட்புமனு தாக்கல் செய்துவருகின்றனர்….
2026 Assembly Polls: தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த முறை 5 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது….
Aadhav Apologises to Rajinikanth: நடிகர் ரஜினிகாந்தை குறித்து தெரிவித்த சர்ச்சையான கருத்துகளுக்கு ஆதவ் அர்ஜுனா வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்