Assembly Election 2026 : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியும் காங்கிரஸும் நான்கு தொகுதிகளில் நேருக்கு நேர் மோதுகின்றன.
Assembly Election 2026 : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியும் காங்கிரஸும் நான்கு தொகுதிகளில் நேருக்கு நேர் மோதுகின்றன.

Published on: April 4, 2026 at 12:06 pm
சென்னை ஏப்ரல் 3, 2026; தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியும் காங்கிரசும் நேருக்கு நேர் மோதுகின்றன. காங்கிரசை பொருத்தமட்டில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது; இந்தக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக 28 சட்டப்பேரவை தொகுதிகளை ஒதுக்கி உள்ளது.
மேலும் ஒரு ராஜ்யசபா சீட்டும் உள்ளாட்சி தேர்தலில் உரிய பிரதிநிதித்துவமும் கொடுக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியை பொருத்தமட்டில் அதிமுக கூட்டணியில் 27 சட்டப்பேரவை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியும் காங்கிரஸும் நான்கு தொகுதிகளில் நேருக்கு நேர் மோதுகின்றன.
காங்கிரஸ் பாஜக மோதல்
இந்த நிலையில் காங்கிரசும் பாஜகவும் நான்கு சட்டப்பேரவை தொகுதிகளில், நேருக்கு நேர் மோதுகின்றன. அந்த சட்டப்பேரவை தொகுதிகள்,
இந்த நான்கு சட்டப் பேரவை தொகுதிகளில் விளவங்கோடு மற்றும் குளச்சல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவை தொகுதிகள் ஆகும்.
ஏப்ரல் 23 வாக்குப்பதிவு
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது; இதில் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அன்றைய தினம் பதிவான வாக்குகள் மே மாதம் நான்காம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; ராமதாஸ் வேட்பாளர் திடீர் தர்ணா போராட்டம்.. வந்தவாசியில் பரபரப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com