MK Stalin: சோழமண்டலமான தஞ்சாவூரில் திமுக மகளிர் மாநாடு நடைபெற உள்ளது; இந்த மாநாட்டுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தலைமை தாங்குகிறார். அமைச்சர் கே.என் நேரு முன்னிலை வகிக்கிறார்.
MK Stalin: சோழமண்டலமான தஞ்சாவூரில் திமுக மகளிர் மாநாடு நடைபெற உள்ளது; இந்த மாநாட்டுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தலைமை தாங்குகிறார். அமைச்சர் கே.என் நேரு முன்னிலை வகிக்கிறார்.

Published on: January 2, 2026 at 5:18 pm
சென்னை ஜனவரி 2, 2025: சோழ மண்டலமான தஞ்சாவூரில் ஜனவரி 19ஆம் தேதி திமுக கட்சியின் சார்பாக மகளிர் அணி மாநாடு மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமை தாங்குகிறார். மேலும் தமிழக அமைச்சர் கே என் நேரு முன்னிலை வகிக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மு க ஸ்டாலின் சிறப்புரை
இந்த மாநாட்டில் தமிழக முதலமைச்சரும் திமுகவின் தலைவருமான மு க ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு ஜனவரி 19ஆம் தேதி தஞ்சாவூரில் உள்ள செங்கிப்பட்டியில் மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு “வெல்லும் தமிழ் பெண்கள்” என தலைப்பிடப்பட்டுள்ளது.
திருப்பூரில் நடத்தப்பட்ட பெண்கள் மாநாடு போன்று இந்த மாநாட்டிலும் திமுக மகளிர் அணியினர் பெரும் திரளாக கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க; தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் இல்லையா? முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கலாமா? டிடிவி தினகரன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com