Thol Thirumavalavan: தி.மு.க.வுக்கு அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை. அதேநேரம்.. என புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Thol Thirumavalavan: தி.மு.க.வுக்கு அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை. அதேநேரம்.. என புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Published on: February 7, 2026 at 2:07 pm
சென்னை, பிப்.7, 2026: தி.மு.க.வுக்கு அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார்.
இது குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், பல்வேறு தமிழக அரசியல் விவகாரங்கள் குறித்து பேசினார்.
முக்கியமாக பா.ஜ.க மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டார். இது குறித்து பேசிய தொல். திருமாவளவன், “அவர்கள் (பாரதிய ஜனதா) மதத்தின் அடிப்படையிலான வெறுப்பு அரசியலை சிறுபான்மையினருக்கு எதிராக பரப்புகிறார்கள். இவர்கள் (பாட்டாளி மக்கள் கட்சி) சாதி அடிப்படையிலான வெறுப்பு அரசியலை பட்டியல் சமூக மக்களுக்கு எதிராக பரப்புகிறார்கள்” என்று குற்றஞ்சாட்டினார்.
பா.ஜ.க, பா.ம.க உடன் கூட்டணி இல்லை
தொடர்ந்து, “பாரதிய ஜனதா மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி இல்லை எனவும் தொல். திருமாவளவன் கூறினார். இது குறித்துப் பேசிய அவர், “சோசியல் என்ஜினியரிங் எனும் பெயரில் சமூகங்களுக்கிடையில் வெறுப்பை விதைத்து பிரிவினையை உண்டாக்கும் இந்த இரு கட்சிகளுடனும்(பாமக, பாஜக) எப்போதும் தேர்தல் கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டோம்” என்றார்.
மேலும், “இந்த முடிவை எடுக்கும் சுதந்திரமும் அதிகாரமும் எங்களுக்கு இருக்கிறது” என்றும் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
தி.மு.க.வுக்கு அழுத்தம்..
இதையடுத்து, “திமுகவிற்கு அழுத்தம் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை. திமுகவின் முடிவு எங்கள் நிலைப்பாட்டிற்கு எதிராக இருந்தால் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என்றார்.
த.வெ.க குறித்து திருமாவளவன்
மேலும், “தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பில்லை என்று கூறிய தொல். திருமாவளவன் அதற்குரிய கட்டமைப்பு அவர்களிடம் இல்லை” என்றார்.
தி.மு.க. கூட்டணியில் இருந்து தொல். திருமாவளவன் வெளியேறினால் அவர் நடிகர் விஜயின் த.வெ.க. கூட்டணியில் இணையக் கூடும் என யூகங்கள் வெளியான நிலையில் தொல். திருமாவளவன் இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரூ.1.5 கோடி வரி ஏய்ப்பு.. நடிகர் விஜய் மனு நிராகரிப்பு.. முழு அலசல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com