Thol Thirumavalavan: தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இணைந்தது, அண்ணன் மு.க. ஸ்டாலின் ராஜதந்திரம் என வி.சி.க. நிறுவனர் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Thol Thirumavalavan: தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இணைந்தது, அண்ணன் மு.க. ஸ்டாலின் ராஜதந்திரம் என வி.சி.க. நிறுவனர் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Published on: February 20, 2026 at 12:43 pm
சென்னை, பிப்.20, 2026: தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தது மு.க. ஸ்டாலினின் ராஜ தந்திரம் என புகழாரம் சூட்டியுள்ளார் வி.சி.க. நிறுவனர் தொல். திருமாவளவன் எம்.பி.
தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு பொதுத்தேர்தல் ஏப்ரல்- மே மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக தே.மு.தி.க., தி.மு.க. இடையே கூட்டணி உடன்பாடு எட்டப்பட்டது. இந்த கூட்டணி உடன்பாட்டை வி.சி.க நிறுவனர்- தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “இது தே.மு.தி.க. எடுத்த அரசியல் என்பதை விட, அண்ணன் முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுத்த ராஜ தந்திரம் என்றுதான் சொல்ல வேண்டும்” என்றார்.
அரசியல் தாக்கல்
தொடர்ந்து, “தி.மு.க., தே.மு.தி.க. அரசியல் கூட்டணி தமிழ்நாடு அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.
2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், வி.சி.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன. எனினும், காங்கிரஸ், தி.மு.க இடையே கூட்டணியில் சில பிணக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தே.மு.தி.க கூட்டணிக்கு வந்தது கூடுதல் பலம்.. உதயநிதி ஸ்டாலின்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com