MK Stalin: மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் குலத் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
MK Stalin: மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் குலத் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
Published on: April 19, 2025 at 9:49 pm
சென்னை ஏப்ரல் 19 2025: மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் குலத் தொழிலை ஊக்குவிப்பதாக உள்ளதாக குற்றம் சாட்டிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்தத் திட்டத்தை கடுமையாக எதிர்க்க இதுதான் காரணம் எனவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து தமிழ்நாடு அரசின் கலைஞர் கைவினை திட்டம் குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து பேசிய மு க ஸ்டாலின், ” பாரதிய ஜனதா குடும்ப குலத் தொழிலை ஊக்குவிக்கிறது; இதனால் அவர்கள் வெளி உலகை காணாமல் இருக்க செய்கிறது.
ஆனால் கலைஞர் கைவினை திட்டம் அப்படியல்ல; மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்திற்கு எதிராகத்தான் கலைஞர் கைவினை திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. குல தொழிலை ஊக்குவிப்பதால் தான் நாங்கள் மத்திய அரசு கொண்டுவந்த விஸ்வகர்மா திட்டத்தை கடுமையாக எதிர்த்தோம்” என தெரிவித்துள்ளார்.
#கலைஞர்_கைவினைத்திட்டம் pic.twitter.com/AQOq1KKkqt
— M.K.Stalin (@mkstalin) April 19, 2025
விஸ்வகர்மா VS கலைஞர் கைவினை திட்டம்
முன்னதாக தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி ஒன்றில், ” மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை தான், கலைஞர் கைவினை திட்டம் என மாற்றம் செய்துள்ளனர்.
விஸ்வகர்மா திட்டத்தில் அளிக்கப்படும் அத்தனை உதவிகளும் இதில் உள்ளது. ஆனால் பெயர்தான் வேறு. இவர்கள் போட்டிக்கு போட்டியாக திட்டம் கொண்டுவர விரும்பினால் மத்திய அரசின் முத்ரா திட்டத்திற்கு எதிராக ஒரு திட்டத்தை அறிவிக்கட்டும் பார்க்கலாம்” என்றார்.
இதையும் படிங்க: அதிமுக பாஜக கூட்டணியால் மு.க ஸ்டாலினுக்கு பதட்டம்.. அவுட் ஆஃப் கண்ட்ரோல்.. தமிழிசை விமர்சனம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com