தாம்பரம்- நாகர்கோவில் ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

October 19, 2025
தாம்பரம்- நாகர்கோவில் ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Published on: August 29, 2024 at 4:05 pm
Updated on: August 29, 2024 at 4:21 pm
Special Trains | தாம்பரம் மற்றும் நாகர்கோவிலுக்கு இடையே இரண்டு சிறப்பு ரயில் சேவைகள் நீட்டிக்கப்படும் என்றும், சென்னை சென்ட்ரல் மற்றும் கோச்சுவேலி இடையே இரண்டு சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
வாராந்திர சிறப்பு சேவை
ரயில் எண் 06012 நாகர்கோவிலுக்கு வாராந்திர சிறப்பு சேவை:
ரயில் எண் 06012 நாகர்கோவிலில் இருந்து வாரம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் இரவு 11:15 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 11:15 மணிக்கு தாம்பரம் வரும். இந்த ரயில் சேவை, 1, 8, 15, 22, 29 செப்டம்பர், 6, 13, 20, 27 அக்டோபர், 3, 10, 17 மற்றும் 24 நவம்பர் ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.
ரயில் எண் 06011 தாம்பரம்-நாகர்கோவிலுக்கு வாராந்திர சிறப்பு சேவை
தாம்பரத்தில் இருந்து வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையிலும் மாலை 3:30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 3:45 மணிக்கு நாகர்கோவிலில் வந்து சேரும். இந்த ரயில், 2, 9, 16, 23, 30 செப்டம்பர், 7, 14, 21, 28 அக்டோபர், 4, 11, 18 மற்றும் 25 நவம்பர் ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.
இந்த ரயில்களின் நேரம், நிற்கும் இடங்கள் மற்றும் அமைப்பில் மாற்றங்கள் எதுவும் ஏற்படாது. இதற்கிடையில், வாராந்திர சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
ரத்து செய்யப்படும் ரயில்கள்
ரயில் எண் 06043 சென்னை சென்ட்ரல் – கோச்சுவேலி
சென்னை சென்ட்ரல் இருந்து செப்டம்பர் 4, 11, 18, 25 ஆம் தேதிகளில் மாலை 3:45 மணிக்கு புறப்படுவதாக இருந்த ரயில் முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.
தொடர்ந்து, ரயில் எண் 06044 கோச்சுவேலியில் இருந்து செப்டம்பர் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் மாலை 6:25 மணிக்கு புறப்படுவதாக இருந்த ரயில் முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க மைசூரு- செங்கோட்டை சிறப்பு ரயில்; தேதி, நேரம் செக் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com