Southern Railway: மதுரை மற்றும் திருநெல்வேலியில் இருந்து ராஜஸ்தான், டெல்லிக்கு சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
Southern Railway: மதுரை மற்றும் திருநெல்வேலியில் இருந்து ராஜஸ்தான், டெல்லிக்கு சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
Published on: April 21, 2025 at 6:12 pm
சென்னை, ஏப். 21 2025: தென்னக ரயில்வே, விடுமுறை காலங்களில் பயணிகளின் அதிக எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, மதுரை மற்றும் திருநெல்வேலியில் இருந்து சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
மதுரை – பகத் கி கோதி (ராஜஸ்தான்) சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்
ரயில் எண் 06067 கொண்ட ரயில் மதுரையில் இருந்து ஏப்ரல் 21 அன்று காலை 10:45 மணிக்கு புறப்பட்டு ராஜஸ்தான் பகத் கி கோதியில் மூன்றாவது நாள் மதியம் 12:30 மணிக்கு சென்றடையும்.
அதேபோல் திரும்பும் பாதையில், ரயில் எண் 06068 கொண்ட ரயிலானது, பகத் கி கோதியில் ஏப்ரல் 24 அன்று காலை 5:30 க்கு புறப்பட்டு மதுரையில் மூன்றாவது நாள் காலை 8:30 -க்கு வந்தடையும். இந்த ரயிலில் 12 ஏசி 3-டையர், 6 ஏசி 3-டையர் எகனாமி உள்ளது.
இந்த ரயில், திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், சுல்லுர்பேட்டை, குடூர், நெல்லூர், ஒங்கோல், விஜயவாடா, கம்மம், வாரங்கல், பால்ஹர்ஷா, சந்த்ராபூர், வார்தா, தான்மண்டல், பத்னேரா, அகோலா, மால்காபூர், பூசாவல், ஜல்கான், நந்துர்பார், உத்னா, அங்க்லேஷ்வர், வடோதரா, ஆனந்த், சபர்மதி, மகேசானா, படன், பில்டி, ராணிவாரா, மார்வார் பின்மல், மோட்ரான், ஜலோர், மோக்கல்சார், சம்தரி மற்றும் லுனி ஆகிய இடங்களில் நிற்கும்.
திருநெல்வேலி – ஹஸ்ரத் நிஜாமுதீன் (டெல்லி) ஒருவழி சிறப்பு ரயில்
ரயில் எண் 06161 கொண்ட ரயிலானது திருநெல்வேலியில் இருந்து ஏப்ரல் 21 இரவு 10:15-க்கு மணிக்கு புறப்பட்டு, டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீனுக்கு நான்காவது நாளில் காலை 2:00 மணிக்கு சென்றடையும். வண்டியில், 20 ஸ்லீப்பர் வகுப்பு, 2 இரண்டாம் வகுப்பு உள்ளது.
இந்த ரயில், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், மெல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், குடூர், நெல்லூர், ஒங்கோல், விஜயவாடா, வாரங்கல், பால்ஹர்ஷா, நாக்பூர், இடார்சி, போபால், பீனா, ஜான்சி, குவாலியர், ஆக்ரா கண்டோன்மெண்ட் மற்றும் மதுரா ஆகிய இடங்களில் நிற்கும்.
மேலும் விவரங்களுக்கு, தென்னக ரயில்வேயின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பார்த்து தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம்; தமிழக அரசுக்கு டி.டி.வி தினகரன் வலியுறுத்தல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com