Shops shut down today in Tirunelveli: வக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மேலப்பாளையத்தில் முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
Shops shut down today in Tirunelveli: வக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மேலப்பாளையத்தில் முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
Published on: April 18, 2025 at 11:27 am
திருநெல்வேலி ஏப்ரல் 18 2025: வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை எதிர்த்து, திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் முழு கடை அடைப்பு போராட்டம் இன்று (ஏப்ரல் 18 2025) நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு திமுக, அதிமுக உள்ளிட்டா பல்வேறு கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன.
மேலும் அனைத்து ஜமாத் சார்பிலும் இந்த கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கடை அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளன. மேலும் அப்பகுதியில் ஆட்டோ கார் வேன் போன்றவைகளும் இயக்கப்படவில்லை.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையத்தில் இஸ்லாமியர்கள் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக இங்கு மிகப்பெரிய அளவில் கடைகடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. வக்பு திருத்த சட்டம் 2025 ஏப்ரல் ஐந்தாம் தேதி அன்று இந்தியா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி திரௌபதி ஒப்புதல் அளித்தார். இதைத் தொடர்ந்து இச்சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தரப்பில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அடுத்த ஒரு வாரத்திற்குள் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசிற்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சஹாபுதீன் ரஸ்வி அவதூறு கருத்தை திரும்ப பெறுக; முனிருத்தீன் ஷெரீப்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com