Tharasu Shyam: திமுக காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது மேலிடத்திலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Tharasu Shyam: திமுக காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது மேலிடத்திலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Published on: January 3, 2026 at 2:07 pm
சென்னை ஜனவரி 3, 2026: திமுக காங்கிரஸ் கூட்டணியில் சில நாட்களுக்கு முன்பு சலசலப்புகள் ஏற்பட்டன; காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், திமுகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கினார்கள்.
திமுகவுடன் கூட்டணியை முடித்துக் கொண்டு தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி தொடர்ந்தால் காங்கிரசுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கிடைக்கும் என அவர்கள் வாதிட்டனர்.
எனினும் இந்த கூற்றுக்களை எல்லாம் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் செல்வப் பெருந்தகை திட்டவட்டமாக நிராகரித்தார். காங்கிரஸ் திமுக கூட்டணி எஃகு கோட்டை போல், வலிமையாக உள்ளது.
எங்களது கூட்டணியில் எவ்வித சலசலப்பு இல்லை; தொகுதி குறித்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.
இதையும் படிங்க; அமித் ஷாவிடம் பேசினேன்.. ஓபிஎஸ் ஓபன் டாக்!
இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் மேல் இடத்தில் இருந்து திமுக காங்கிரஸ் கூட்டணியில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று இருப்பதாகவும் தமிழக வெற்றி கழகம் மற்றும் காங்கிரஸ் இடையே எந்த பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கருத்து
இதுகுறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், ” காங்கிரஸ் இதனை முன்பே மறுத்திருக்க வேண்டும்; ப. சிதம்பரத்திடம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இது குறித்து கண்டிப்புடன் கூறியதாக தகவல். இந்த நிலையில் விவகாரம் பெரிதான பின்பு காங்கிரசின் சோதங்கர் விளக்கம் அளித்துள்ளார்; இந்த விளக்கம் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியில் அடுத்த கட்ட பணிகளை செய்ய ஏதுவாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க; தமிழ்நாட்டில் அமைதிப் புரட்சி.. வீடுதோறும் விஜய் முழக்கம்.. ஜே.சி.டி பிரபாகர்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com