H Raja arrested in Chennai: நான் அந்த வண்டியில் ஏற மாட்டேன்; எனது போராட்டத்தில் என்ன தப்பு? என ஆவேசமாக பேசினார் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச் ராஜா
H Raja arrested in Chennai: நான் அந்த வண்டியில் ஏற மாட்டேன்; எனது போராட்டத்தில் என்ன தப்பு? என ஆவேசமாக பேசினார் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச் ராஜா
Published on: March 17, 2025 at 1:57 pm
Updated on: March 17, 2025 at 2:03 pm
சென்னை, மார்ச் 17, 2025: டாஸ்மாக் நிறுவனத்தில் ரூபாய் ஆயிரம் கோடிகள் வரை ஊழல் நடைபெற்றதாக அமலாக்க துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் விரிவான விசாரணை கோரி தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று (மார்ச் 17 2025) பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா கலந்து கொண்டார்.
முன்னதாக இந்தப் போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும் வகையில், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் வீட்டுச் சிறை வைக்கப்பட்டனர் என புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில் சென்னையில் எச் ராஜா கைது செய்யப்பட்டார். அப்போது அவர் போலீசாரின் எந்த வண்டியில் நான் ஏற மாட்டேன்; என் போராட்டத்தில் என்ன தப்பு?
ஒரு குற்றவாளியை சிறைக்குள் சல்யூட் அடித்து நீங்கள் வைத்திருந்தீர்கள். ஆனால் பாருங்கள் இன்று என்ன நடக்கிறது என்று?
நான் இந்த வண்டியில் ஏற்ற மாட்டேன்..! இது நாயை ஏற்றும் வண்டி” என்றார். தொடர்ந்து செந்தில் பாலாஜி ஒரு கிரிமினல் என்றும் அவரை கைது செய்ய போலீசாருக்கு தைரியம் இல்லை என்றும் கூறினார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜாவின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இதையும் படிங்க: டாஸ்மாக் எதிரான போராட்டத்தை வரவேற்கிறோம்.. ஆனால்.., தொல். திருமாவளவன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com