Seeman: பிரபாகரன் பெரியாரை விரும்பவில்லை என்று கூறிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்; பெரியாரை விரும்பும் தம்பிகள் கட்சியை விட்டு வெளியேறலாம் என்றார்.
Seeman: பிரபாகரன் பெரியாரை விரும்பவில்லை என்று கூறிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்; பெரியாரை விரும்பும் தம்பிகள் கட்சியை விட்டு வெளியேறலாம் என்றார்.
Published on: February 10, 2025 at 6:22 pm
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து பல்வேறு விஷயங்களை பேசி வருகிறார். இவை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு முன்னதாக இவரது பேச்சுக்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தன.
இந்த சலசலப்பு தற்போது வரை ஓய்வதாக இல்லை; இந்த நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், ” பெரியாரை ஏற்றுக் கொண்ட தம்பிகள் கட்சியை விட்டு வெளியேறலாம்” என்றார்.
தொடர்ந்து பேசிய சீமான், ” பிரபாகரன் பெரியாரை ஏற்றுக் கொள்ளவில்லை; பெரியாரை ஏற்றுக் கொள்ளும் தம்பிகள் கட்சியை விட்டு வெளியேறலாம்” என்றார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே, பெரியார் குறித்து பல்வேறு விஷயங்களை சீமான் பேசி வருகிறார்.
சீமானின் எந்த பேச்சுக்கு திமுக மற்றும் அவரின் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன; எதிர்க்கட்சியான அதிமுகவும் இந்த விஷயத்தில் சீமானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழ்நாட்டின் உண்மை பிரச்சனைகளிலிருந்து மக்களை திசை திருப்ப சீமான் திமுகவுக்கு பயன்படுகிறார் எனவும் அதிமுக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.
இதற்கிடையில் கடந்த சட்டமன்ற இடைத்தேர்தலைப் போன்று இந்த சட்டமன்ற இடைத்தேர்தலிலும் சீமான் மீது ஈரோட்டில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக தேர்தல் பரப்புரையின் போது சீமான் நீங்கள் வெங்காயம் என்றால் நாங்கள் வெடிகுண்டு என்று பேசினார் என குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க ரயிலில் கர்பிணிக்கு நேர்ந்த கொடூரம் ; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com