Tamil Nadu | மக்கள் மாயாண்டி குடும்பத்தார் படத்தை இன்னமும் மறக்கவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
Tamil Nadu | மக்கள் மாயாண்டி குடும்பத்தார் படத்தை இன்னமும் மறக்கவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
Published on: September 21, 2024 at 12:10 pm
Tamil Nadu | நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவகங்கை பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, “மக்கள் மாயாண்டி குடும்பத்தார் படத்தை இன்னமும் மறக்கவில்லை. நான் பொதுக்கூட்ட மேடையில் 6 மணிக்கு மேலாக வியர்த்து பேசிவிட்டு வந்தாலும், மாயாண்டி குடும்பத்தாருக்கு பிறகு வேறு படங்களில் நடிக்கவில்லையா? எனக் கேட்கின்றனர்” என்றார்.
இந்தப் பேச்சை தொண்டர்கள் கை தட்டி ரசித்தனர். ராசு மதுரவன் எழுதி இயக்கிய படம் மாயாண்டி குடும்பத்தார். 2009ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் சீமானும் நடித்திருப்பார். தந்தையாக மணிவண்ணன் வாழ்ந்திருப்பார். படம் கிராமப்புறங்களிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தில் வரும் முத்துக்கு முத்தாக பாடல் மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தமிழ் அறிவை ஊட்டும் நிகழ்ச்சி: தமிழோடு விளையாடு சீசன் 2!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com