Sasikala: புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்திருந்த விகே சசிகலா இன்று கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அறிவித்துள்ளார்.
Sasikala: புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்திருந்த விகே சசிகலா இன்று கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அறிவித்துள்ளார்.

Published on: March 13, 2026 at 2:01 pm
Updated on: March 13, 2026 at 2:06 pm
சென்னை, மார்ச் 13 2026: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும் முன்னாள் அதிமுக தலைவருமான வி.கே. சசிகலா இன்று தனது புதிய அரசியல் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அறிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகும், சசிகலா அந்தக் கட்சியின் உரிமை குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். சமீபத்தில் தனிக் கட்சி தொடங்குவதாக அறிவித்திருந்தநிலையில், இன்று தனது புதிய கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
அவரது புதிய கட்சிக்கு “அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், அந்தக் கட்சிக்கான தேர்தல் சின்னமாக “தென்னந்தோப்பு” ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சசிகலா தெரிவித்தார். இந்த கட்சியின் மூலம் வரவிருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஒரே கருத்துள்ள அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் சசிகலா தெரிவித்துள்ளார். சசிகலா புதிய கட்சி தொடங்கி பெயர் மற்றும் சின்னத்தை அறிவித்திருப்பது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : திமுக ஆட்சியில் கொலைகள் குறைவா?..தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது!.. அன்புமணி குற்றச்சாட்டு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com