தாயின் ஆண் நண்பரால் 20 வயது இளம்பெண் கர்ப்பம்.. சென்னை வடபழனியில் பரபரப்பு!

Saligramam: சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தாயின் ஆண் நண்பர் தன் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

Published on: February 23, 2026 at 3:01 pm

சென்னை, பிப்.23, 2026: சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தாயின் ஆண் நண்பர் தன் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்தத் தாக்குதலில் ஏற்பட்ட கடுமையான வயிற்று வலி காரணமாக, அவர் திருவண்ணாமலை செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், மருத்துவ பரிசோதனையின் போது, அவர் கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சாலிகிராமத்தைச் சேர்ந்த 20 வயது பெண், தாயின் துணைவரால் பாலியல் வன்முறைக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இதனால் அவர் 7 வார கர்ப்பம் அடைந்தார் எனவும் கடுமையான வயிற்று வலி காரணமாக, அவர் திருவண்ணாமலை செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: சென்னை கொளத்தூரில் ஏ.சி பேருந்து நிலையம்.. ரூ.1.6 கோடி மதிப்பீடு.. மு.க ஸ்டாலின் திறப்பு!

மருத்துவ பரிசோதனை

இந்த நிலையில், மருத்துவர்கள், அவர் 7 வார கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்தினர். இந்த நிலையில், அவரது ஒப்புதலுடன், மருத்துவ ரீதியாக கருக்கலைப்பு செய்யப்பட்டது.

வழக்குப்பதிவு

மருத்துவமனை தகவலின் அடிப்படையில், செய்யாறு அனைத்து பெண்கள் போலீஸ் நிலையம் முதல் தகவல் அறிக்கை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது. இந்நிலையில், குற்றம் நடந்த இடம் வடபழனி அனைத்து பெண்கள் போலீஸ் நிலையம் வரம்பிற்குள் வந்ததால், வழக்கு அங்கு மாற்றப்பட்டது.
குற்றச்சாட்டில் உள்ள தாயின் துணைவர் மற்றும் தாய் தற்போது தப்பிச் சென்றுள்ளனர். போலீசார் அவர்களை கைது செய்ய முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: அரசியலுக்கு வரும் முன்பு உங்களிடம் இருந்த சொத்துக்கள் எவ்வளவு? த.வெ.க விஜய் கேள்வி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com