பாங்காங் டூ சென்னை.. ரூ.23 கோடி உயர்ரக கஞ்சா.. கேரள இளைஞர்கள் கைது!

hydroponic ganja seized at Chennai airport: சென்னை விமான நிலையத்தில் ரூ.23 கோடி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published on: February 7, 2026 at 4:26 pm

சென்னை, பிப்.7, 2026: சென்னை விமான நிலைய சுங்கத்துறையின் வான் புலனாய்வுப் பிரிவு , சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.23 கோடி மதிப்புள்ள 23 கிலோ உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளது. இந்த கஞ்சா கடத்தல் வழக்கில், கேரளாவைச் சேர்ந்த ஆறு இளைஞர்களைக் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹைட்ரோபோனிக் கஞ்சா என்பது ஊட்டச்சத்து நிறைந்த நீர் கரைசல்களைப் பயன்படுத்தி மண் இல்லாத அமைப்பில் வளர்க்கப்படும் அதிக ஆற்றல் கொண்ட வகையாகும்.

இந்த கஞ்சா தாய்லாந்தில் இருந்து தனித்தனி விமானங்கள் மூலமாக கடத்தப்பட்டுள்ளது. உளவுத்துறை அளித்த உளவுத் தகவல் அடிப்படையில், பயணிகளை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
இந்த நிலையில், இந்த கஞ்சா ​​பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் சாக்லேட் பாக்கெட்டுகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலையில் நடத்தப்பட்ட தொடர் நடவடிக்கையில், பாங்காக்கிலிருந்து வந்த மேலும் இரண்டு கேரளாவைச் சேர்ந்த இளைஞர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். தொடர்ந்து, 8 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா மீட்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு ரூ.8 கோடி ஆகும். அந்த வகையில் பறிமுதல் செய்யப்பட்ட மொத்த கஞ்சா பொருள்களின் மதிப்பு ரூ.23 கோடி ஆகும்.

இதையும் படிங்க: அங்கன்வாடி ஊழியர்களின் 13 அம்ச கோரிக்கை என்னாச்சு? அன்புமணி ராமதாஸ் கேள்வி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com