RMC Chennai | Rain Alert | “வடதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது” என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பா. செந்தாமரைக் கண்ணன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “தமிழகத்தில் அநேக இடங்களிலும் (வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களில், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில்), புதுவையிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதியில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று (அக்.17, 2024) பெய்யக் கூடும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர்,
திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
18.10.2024
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், வேலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
19.10.2024
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
20.10.2024
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
21.10.2024 மற்றும் 22,10,2024
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன அதி கனமழை பெய்யக்கூடும். வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன மிக கனமழை பெய்யக்கூடும். வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
கர்நாடக கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க
FIR against Ponmudy: தமிழக அமைச்சர் பொன்முடியின் ஆபாசமான கருத்துக்காக எஃப்ஐஆர் பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் அறிக்கை…
Pastor John Jebaraj: கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது உறவினரும் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இது…
VCK MP Ravikumar: தமிழ்நாடு அரசு சாதியவாதிகளிடம் தோற்பது ஏன் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி, ரவிக்குமார் கேள்வி எழுப்புகிறார்….
Nainar Nagendran: அதிமுக பாஜக கூட்டணியை பிளவுபடுத்தும் முயற்சியை கைவிடுங்கள் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்….
Anbumani Ramadoss: தேசிய கல்வி உதவித்தொகை தேர்வு தேர்ச்சியில் குளறுபடி இருப்பதாகவும், திருத்தப்பட்ட பட்டியல் வெளியிட வேண்டும் என்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்…
Muniruddin Sharif: தமிழக இஸ்லாமியர்கள் குறித்து சஹாபுதீன் ரஸ்வி அவதூறு கருத்தை திரும்ப பெறுக என இந்திய தேசிய லீக் மாநில தலைவர் முனிருத்தீன் ஷெரீப் தெரிவித்துள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்