RMC Chennai | Rain Alert | “வடதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது” என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பா. செந்தாமரைக் கண்ணன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “தமிழகத்தில் அநேக இடங்களிலும் (வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களில், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில்), புதுவையிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதியில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று (அக்.17, 2024) பெய்யக் கூடும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர்,
திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
18.10.2024
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், வேலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
19.10.2024
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
20.10.2024
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
21.10.2024 மற்றும் 22,10,2024
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன அதி கனமழை பெய்யக்கூடும். வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன மிக கனமழை பெய்யக்கூடும். வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
கர்நாடக கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க
Assembly Election 2026: ” யார் எந்த மாதிரியான அவதூறுகள் பரப்பினாலும் இறைவன் அருளால் நாம் நமது இலக்கை அடைய முடியும் என பேசிய தமிழக வெற்றிக்…
Chennai Acid Attack : சென்னையில் திராவகம் வீச்சுக்குள்ளான பெண் பகுதி பார்வையை இழந்து உயிருக்கு போராடி வருகிறார்….
2026 Tamil Nadu Legislative Assembly elections: திமுக கூட்டணியில், இந்திய கம்யூனிஸ்ட் ஐந்து இடங்களில் போட்டியிடுகிறது; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்கள் குறித்த விவரங்கள்…
Assembly Election 2026: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகள் வரை கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது….
Puducherry Legislative Assembly Election 2026: புதுச்சேரியில் தி.மு.க, காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு எட்டப்படாத நிலையில், தி.மு.க.வினர் வேட்புமனு தாக்கல் செய்துவருகின்றனர்….
2026 Assembly Polls: தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த முறை 5 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்