Rain Alert | தமிழகத்தில் அநேக இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் மயிலாடுதுறை நாகை மாவட்டம் திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று அதிக கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம் கடலூர் அரியலூர் தஞ்சாவூர் புதுக்கோட்டை சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை கனமழையும் கள்ளக்குறிச்சி பெரம்பலூர் திருச்சி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாளை கடலூர் மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிக கனமழையும், ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் ராணிப்பேட்டை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரித இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
- இதன் காரணமாக கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகள் ஒத்திவைப்பு
- திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
- கடலூரில் உள்ள சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பருவ தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க
TTV Dinakaran: ”சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதாரத்தோடு மழலைக் குழந்தைகளின் எதிர்காலத்தோடும் விளையாடும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.” என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கடும்…
K Veeramani : தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வரவெற்பு தெரிவித்துள்ளார்….
“திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர். பாலு அவர்களின் மனைவியும், தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்களின் அன்னையுமான ரேணுகா தேவி அவர்கள்…
“சிறுநீரகக் கொள்ளை பதட்டம் தீரும் முன்பே கல்லீரல் திருட்டு” என கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்