Trichy rowdy Jambukeswaran arrested | திருச்சியில் தப்பியோட முயற்சித்ததாக ரவுடி ஜம்புகேஸ்வரனை போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடித்தனர்.
Trichy rowdy Jambukeswaran arrested | திருச்சியில் தப்பியோட முயற்சித்ததாக ரவுடி ஜம்புகேஸ்வரனை போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடித்தனர்.
Published on: September 23, 2024 at 9:50 pm
Trichy rowdy Jambukeswaran arrested | தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் ரவுடிகளின் அட்டகாசம் ஓங்கிவந்த நிலையில், ரவுடிகளின் பாஷையில் அவர்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கொலை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். அடுத்து காக்கா தோப்பு பாலாஜி, ரவுடி சீசிங் ராஜா என 2 பேர் அடுத்தடுத்து என்கவுன்ட்டர் நடவடிக்கையில் கொல்லப்பட்டனர்.
முன்னதாக கோவையில் பதுங்கி இருந்த ரவுடி ஒருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இந்த நிலையில் இன்று திருச்சியில் ரவுடி ஜம்புகேஸ்வரன் போலீசாரால் சுடப்பட்டு பிடிக்கப்பட்டுள்ளார். போலீஸ் பிடியில் இருந்து தப்பித்து சென்ற இவரை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
போலீசார் சுட்டதில் அவரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்தச் சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ரவுடி ஜம்புகேஸ்வரன் ஆட்டுக்குட்டி சுரேஷ் கொலையில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ஆம்ஸ்ட்ராங் கொலை; சீசிங் ராஜாவுக்கு தொடர்பு இல்லை: காவல் ஆணையர் சிபி சக்கரவர்த்தி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com