திருநெல்வேலியில் 680 கிலோ கஞ்சா.. தீயிட்டு அழித்த போலீசார்!

Tirunelveli: திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 680 கிலோ 929 கிராம் கஞ்சா போலீசாரால் அழிக்கப்பட்டது.

Published on: March 12, 2026 at 2:37 pm

Updated on: March 12, 2026 at 3:58 pm

திருநெல்வேலி, மார்ச் 12 2026: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட 182 கஞ்சா வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து 680 கிலோ 929 கிராம் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களின் உத்தரவுகளின் படியும், சரக போதைப்பொருள் ஒழிப்புக் குழுவின் பரிந்துரைகளையும் அடிப்படையாக கொண்டு இந்த கஞ்சா அழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

திருநெல்வேலி சரக துணை காவல் கண்காணிப்பாளர் பி. சரவணன், ஐபிஎஸ், தலைமையிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் முன்னிலையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா விஜயநாராயணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாப்பன்குளம் கிராமத்தில் உள்ள அசெப்டிக் சிஸ்டம்ஸ் பயோமெடிக்கல் கழிவு மேலாண்மை நிறுவனத்தில், எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்கதூத்துக்குடியில் 12ஆம் வகுப்பு மாணவி கொடூர கொலை..6 தனிப்படைகள் அமைப்பு

தூத்துக்குடியில் 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை படுகொலை.. பெண்கள் எப்படி சுதந்திரமாக நடக்க முடியும்? டிடிவி தினகரன்! TTV Dinakaran

தூத்துக்குடியில் 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை படுகொலை.. பெண்கள் எப்படி சுதந்திரமாக

மேற்கு ஆசியாவில் பணிபுரியும் 593 தமிழக மீனவர்கள்.. மீட்பதில் சிக்கல், நீதிமன்றத்தில் மத்திய அரசு! Madurai High Court

மேற்கு ஆசியாவில் பணிபுரியும் 593 தமிழக மீனவர்கள்.. மீட்பதில் சிக்கல், நீதிமன்றத்தில் மத்திய

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com