Palani Panchamirtam | பழநி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
February 6, 2025
Palani Panchamirtam | பழநி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Published on: September 21, 2024 at 3:16 pm
Palani Panchamirtam | திருப்பதி கோவில் லட்டு தயாரிக்கப்பட்ட நெய்யில் கலப்படம் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், கர்நாடக அரசு கோவில்களில் அரசின் நந்தினி நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் பழநி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யின் தரம் குறித்தும் சர்ச்சைகள் எழுந்தன.
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் புகார்கள் எழுந்த நிலையில், பழநி பஞ்சாமிர்தம் தயாரிக்க ஆவின் நெய் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்திருந்தது. இந்த நிலையில், அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, “பொய்யான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
மேலும், “பழநி பஞ்சாமிர்தம் குறித்து தவறான தகவல் பரப்பிய பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் செல்வ குமார், வினோஜ் பி செல்வம் ஆகியோர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க : திருப்பதிக்கு அமுல் நெய் வழங்கியதா? வெடித்த புதிய சர்ச்சை- விளக்கம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com