அதிமுக தனித்துப் போட்டியிட தயார்… திமுக தயாரா? மு க ஸ்டாலினுக்கு கேள்வி

OS Manian: 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட தயார்; அதே நேரம் திமுக தயாரா என கேள்வி எழுப்பி உள்ளார் ஓ எஸ் மணியன்.

Published on: February 4, 2026 at 10:19 pm

சென்னை பிப்ரவரி 4, 2026; தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் 2026 சட்டமன்ற பொது தேர்தல் குறித்த அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது. மாநிலத்தைப் பொருத்தமட்டில் இழந்த ஆட்சியை மீண்டும் பெற அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. அதே நேரம் ஆட்சியை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் திமுக தள்ளப்பட்டுள்ளது.

திமுகவை பொருத்தமட்டில் காங்கிரசுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது; சமீப நாட்களாக திமுக மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி உறவில் சுமுகம் ஏற்படவில்லை. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகள் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.இந்த கோரிக்கைக்கு பதில் அளித்த திமுக மூத்த நிர்வாகியும் அமைச்சருமான ஐ. பெரியசாமி, “இதுபோன்ற கோரிக்கைகளில் முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு விருப்பம் கிடையாது”என்றார். இது அப்போது காங்கிரஸ் கட்சிக்கு அவர் அளித்த பதில் என நம்பப்பட்டது.

இதையும் படிங்க: காங்கிரசுக்கு 12 சதவீத வாக்கு.. அதிமுகவை த.வெ.க வெல்லும்.. பிரவீன் சக்கரவர்த்தி

இந்த நிலையில் காங்கிரசுடன் கூட்டணி இறுதிச் செய்ய திமுக தீவிரம் காட்டி வருகிறது; காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை எம்எல்ஏ காங்கிரஸ் திமுக கூட்டணி இரும்புக்கோட்டை போல் வலிமையாக உள்ளது என ஏற்கனவே தெரிவித்துள்ளார். அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணியில் தேசிய கட்சியான காங்கிரஸ் அங்கம் வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக கூட்டணியை பொருத்தமட்டில் பாரதிய ஜனதா அங்கம் வகிக்கிறது. மேலும் திமுக கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள் , விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன.

அதிமுகவை பொருத்தமட்டில், அன்புமணி ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சி, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், பாரிவேந்தரின் ஐ.ஜே.கே, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
இந்த நிலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பிரத்தேகமாக பேட்டியளித்த அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஓ எஸ் மணியன், தனித்துப் போட்டி என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில்,” அதிமுக தனித்துப் போட்டியிட தயார்; அதே நேரம் திமுக தனித்துப் போட்டியிட தயாரா என அக்கச்சியில் தலைவர் மு க ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: நடிகர் விஜய்யின் த.வெ.க.வுக்கு திமுக மிரட்டல்.. அருண் ராஜ்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com