Thoothukudi matchbox factory accident: கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலை வெடி விபத்தில், 4 நாள்களுக்கு முன் நிச்சயிக்கப்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Thoothukudi matchbox factory accident: கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலை வெடி விபத்தில், 4 நாள்களுக்கு முன் நிச்சயிக்கப்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Published on: March 3, 2026 at 7:41 am
தூத்துக்குடி, மார்ச் 3, 2026: கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் பகுதியில் உள்ள தீக்குச்சி கிடங்கில் திங்கட்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில், விஜயபுரியைச் சேர்ந்த கார்த்திக் (27) உயிரிழந்தார்.
மேலும் சுடலைமுத்து (42) மற்றும் கணேசன் (47) தீக்காயங்களுடன் கடுமையாக காயமடைந்தனர். தீ விபத்து காலை 8.30 மணியளவில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சில நிமிடங்களில் தீ பரவி கிடங்கு வெடித்தது. இதில், கார்த்திக் அப்போது உள்ளே இருந்ததால் உயிரிழந்தார் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கோவில்பட்டி தீயணைப்பு படையினர் நான்கு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். காயமடைந்தவர்கள் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மருத்துவமனை வட்டாரங்கள் அவர்கள் தீவிர நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கார்த்திக்கின் குடும்பத்தாருக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் மற்றும் காயமடைந்த சுடலைமுத்து, கணேசன் ஆகியோருக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
கார்த்திக்கின் நிச்சயதார்த்தம் நான்கு நாட்களுக்கு முன்பே நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாங்கள் பேரம் பேசும் கட்சியல்ல.. தொல். திருமாவளவன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com