மக்கள் நடிகர்களை பார்த்து ஓட்டுப் போடப்போவதில்லை என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான நாராயண சாமி கூறியுள்ளார்.
மக்கள் நடிகர்களை பார்த்து ஓட்டுப் போடப்போவதில்லை என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான நாராயண சாமி கூறியுள்ளார்.
Published on: September 7, 2024 at 10:41 pm
Narayanasamy | புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் நாராயண சாமி திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நடிகர்களில் எம்.ஜி.ஆர் தவிர வேறு யாரும் கட்சி ஆரம்பித்து ஜெயிக்கவில்லை.
விஜய் என் நண்பர். அவர் அரசியல் கட்சி தொடங்கி கொடியை அறிமுகப்படுத்தியதற்கு என் வாழ்த்துகள். ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய ஒன்று உள்ளது. நடிகர்கள் கட்சி ஆரம்பித்து சட்டமன்றம் வரை வந்தாலும், ஒரு சில எம்.எல்.ஏ.க்கள் உடன் காணாமல் போய்விடுவார்கள்.
ஆக நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பதால் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் வந்துவிட போவதில்லை. மேலும் மக்களும் நடிகர்களை பார்த்து ஓட்டுப் போடப்போவதில்லை” என்றார். தொடர்ந்து, ரங்கசாமி விஜய் மாநாட்டில் கலந்துகொள்வார் என்று செய்திகள் வெளியாகிறதே என்ற கேள்விக்கு, “பாரதிய ஜனதா ரங்கசாமியை கைவிட்டுவிட்டது. ஆகையால் விஜய்யை பிடித்து கரை சேரலாம் என அவர் நினைக்கிறார்” எனப் பதிலளித்தார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் முன்னாள் முதலமைச்சர் திரு.நாராயணசாமி அவர்கள் சாமி தரிசனம் செய்தார்.#GaneshFestival2024 #GaneshChaurthi2024 pic.twitter.com/ZSouZtUNRV
— V.Narayanasamy (@VNarayanasami) September 7, 2024
மேலும், “புதுச்சேரியில் தம்மை கிரண் பேடி பணி செய்ய விடாமல் தடுத்தார். அதேபோல் மு.க. ஸ்டாலினை ஆர்.என். ரவி தடுக்கிறார்” என்றும் குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து, “பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டார்.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com