MLA Velmurugan: தமிழர் பண்பாடை சீரழிக்கும் விதமாக உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும் என பண்ருட்டி எம்எல்ஏவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவன தலைவருமான வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
MLA Velmurugan: தமிழர் பண்பாடை சீரழிக்கும் விதமாக உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும் என பண்ருட்டி எம்எல்ஏவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவன தலைவருமான வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Published on: November 9, 2025 at 2:36 pm
சென்னை நவம்பர் 9 2025; தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தலைவர் வேல்முருகன் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,” தமிழரின் பண்பாட்டுக்கு எதிராக உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும்,” தமிழர் வாழ்வின் மகத்தானச் செல்வங்களாகிய நாணம், ஒழுக்கம், நெறி ஆகியவற்றை, இந்த நிகழ்ச்சி கேலி செய்கிறது. சண்டை, குரோதம், ஆபாசம், பொய், வன்முறை ஆகிய எதிர்மறை உணர்ச்சிகளை மட்டுமே தினசரி அத்தியாயங்கள் காட்டுகின்றன. இவை எதுவுமே தமிழ்ச் சமூகத்தின் பாரம்பரிய அடையாளங்கள் அல்ல. இந்த நிகழ்ச்சி இளைஞர்களைத் தவறானப் பாதைக்கு இட்டுச் செல்வதுடன், தமிழர் தொன்மைக்கும். குடும்ப நல்லிணக்கத்திற்கும். சமூக ஒழுக்கத்திற்கும் கடுமையானப் பண்பாட்டு அச்சுறுத்தலாக விளங்குகிறது.
வணிக நலனுக்காக மக்களை ஏமாற்றி, சமூக உளவியலைக் கெடுக்கும் இந்த நிகழ்ச்சியைத் தமிழக அரசு உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்றும். ஊடகங்களில் பண்பாட்டு விழுமியங்களைக் காக்க ‘Cable Television Regulation Act, 1995’ மற்றும் ‘Program Code’ விதிமுறைகளைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும். தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஏற்கனவே வலியுறுத்தியிருக்கிறது.
இதன் ஒரு பகுதியாக, தமிழர் பண்பாடு மற்றும் குடும்ப அமைப்பைச் சீர்குலைக்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைத் தடை செய்யக் கோரி, வரும் ஞாயிற்றுக்கிழமை 09.11.2025 அன்று. மாலை 04.00 மணி அளவில், பிக் பாஸ் படப்பிடிப்பு தளம் அருகே. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மகளிர் அணி சார்பில். கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தத் தீர்மானித்துள்ளோம்.
தமிழரின் தொன்மையும், எதிர்காலச் சந்ததியினரின் நலனும் காக்கப்பட வேண்டிய இந்தக் கொள்கை சார்ந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாட்டின் ஊடக நிறுவனங்களும், செய்தியாளர்களும் பங்கேற்று. இந்தச் சமூகச் சீரழிவு குறித்தத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நியாயமானப் போராட்டத்தைத் தமிழகம் முழுவதும் கொண்டு செல்லுமாறு வலியுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க திமுகவை எதிர்ப்பதால் வாழ்த்தலாம்.. நத்தம் விஸ்வநாதன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com