M K Stalin: கிராமங்களை வளர்த்து எடுப்பதே திராவிட மாடல் அரசின் இலக்கு எனத் தெரிவித்துள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.
M K Stalin: கிராமங்களை வளர்த்து எடுப்பதே திராவிட மாடல் அரசின் இலக்கு எனத் தெரிவித்துள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.
Published on: October 11, 2025 at 6:36 pm
சென்னை, அக்.11, 2025: தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், “இந்திய நாட்டின் அடித்தளமாக விளங்கும் ஊராட்சிகளின் கிராம சபை கூட்டத்தை, வரலாறு காணாத வகையில் சிறப்புற நடத்தியுள்ளோம்!” எனத் தெரிவித்துள்ளார்.
நம்ம ஊர் நம்ம அரசு திட்டம்
மேலும், “இன்றைய கிராம சபையில், மக்களின் முதன்மைத் தொண்டனாகப் பெருமையோடு பங்கேற்று, அனைத்துக் கிராமங்களின் முதன்மையான 3 தேவைகளை உடனடியாகத் தீர்த்து வைக்கும், நம்ம ஊர் நம்ம அரசு திட்டத்தை அறிவித்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
திராவிட மாடல் அரசின் இலக்கு
இதையடுத்து, “தன்னிறைவடைந்த, இணையம் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளால் உலகத்தோடு இணைந்த கிராமங்களை வளர்த்தெடுப்பதே நமது திராவிட மாடல் அரசின் இலக்கு” எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : மகளிர் உரிமைத் தொகையா அல்லது தேர்தல் அச்சாரத் தொகையா? மு.க ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com