2026 சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என மு.க. ஸ்டாலின் கூறினார்.
2026 சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என மு.க. ஸ்டாலின் கூறினார்.
Published on: September 17, 2024 at 11:38 pm
Updated on: September 17, 2024 at 11:39 pm
M K Stalin | தி.மு.கவும் முதல்வர் பதவியும் எனதிரு கண்கள் என மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சியாக பேசினார். தி.மு.க.வின் பவளவிழா மற்றும் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று (செப்.17,2024) நடந்தது. இந்தப் பொதுக்கூடடத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தி.மு.கவும் முதல்வர் பதவியும் எனதிரு கண்கள்” என்றார்.
பெரியார் விருது: திருமிகு பாப்பம்மாள் அவர்கள்#DMK75 pic.twitter.com/oHCOAEiq4B
— M.K.Stalin (@mkstalin) September 17, 2024
தொடர்ந்து பேசிய மு.க. ஸ்டாலின், “முப்பெரும் விழா மற்றும் பவள விழாவுக்கு ஏற்பாடு செய்த அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு வாழ்த்துகள். என்னை வாழ வைத்துக் கொண்டிருப்பவர்கள் தொண்டர்கள்தான். அமெரிக்கா சென்றோம் என்பதை விட முதலீடுகளை வென்றோம் என்றே சொல்ல வேண்டும்.
#Live: கழக #முப்பெரும்_விழா-வில் சிறப்புரை#DMK75https://t.co/Y506p6tTkj
— M.K.Stalin (@mkstalin) September 17, 2024
இந்த பவள விழாவை நடத்துவதை என் வாழ்நாளில் கிடைத்த பெருமையாக கருதுகிறேன். 25, 50, 75 ஆகிய ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியில் இருந்துள்ளது” என்றார். தொடர்ந்து, “தமிழ்நாட்டை வளமாக மாற்றியுள்ளது” என்றார்.
மேலும் பேசிய மு.க. ஸ்டாலின், “இன்று கிரீம் பன்னுக்கு எவ்வளவு ஜி.எஸ்.டி என்பதை கேட்கக் கூட உரிமை இல்லாத நிலை உருவாகியுள்ளது. இந்தச் சூழலில் மாநில சுயாட்சியை மீட்டெடுப்பதற்கான அறிவிப்புதான் இந்த பவள விழா.
வள்ளுவ முனை முதல் தலைநகர் சென்னை வரை இனமான உணர்வால் ஓருயிராய் வாழும் உடன்பிறப்புகளின் சங்கமமானது அண்ணா சாலை ஒய்.எம்.சி.ஏ. திடல்!
— M.K.Stalin (@mkstalin) September 17, 2024
அமெரிக்கப் பயணத்துக்குப் பின் உடன்பிறப்புகளின் முகங்களை ஒருசேரக் கண்டு உற்சாகம் பெற்றேன்!
நமது உயிர்நாடிக் கொள்கைகளில் ஒன்றான மாநில சுயாட்சிக்… pic.twitter.com/NPVwo1iUld
இதுவரை நடந்த தேர்தல்களை போல் அடுத்த தேர்தல்களிலும் நாம் வெற்றிப் பெறப் போகிறோம். நம்முடைய அடுத்த இலக்கு 2026 தேர்தல். இதுவரை எந்தக் கட்சியும் வெற்றி பெறாத வகையில் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க : ‘ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு’: திருமாவளவன் வீடியோவை பதிவிட்டது யார்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com