Minister Raghupathi | DMK | தி.மு.க. கூட்டணியை அசைக்க முடியாது என அமைச்சர் ரகுபதி கூறினார்.
Minister Raghupathi | DMK | தி.மு.க. கூட்டணியை அசைக்க முடியாது என அமைச்சர் ரகுபதி கூறினார்.
Published on: October 21, 2024 at 6:14 pm
Minister Raghupathi | DMK | தி.மு.க. கூட்டணியை அசைக்க முடியாது என அமைச்சர் ரகுபதி கூறினார். 2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியமைப்போம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ள நிலையில் அமைச்சர் ரகுபதியிடம் இருந்து இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.
இது தொடர்பாக பேசிய ரகுபதி, “தி.மு.க கூட்டணி உடையும் என்ற எடப்பாடி பழனிசாமியின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது. தி.மு.க. கூட்டணி வலிமையாக உள்ளது. ஆனால் எடப்பாடி பழனிசாமி பகல் கனவு காண்கிறார்.
அவரின் பகல் கனவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒருபோதும் பலிக்க விட மாட்டார்” என்றார். கடந்த தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் பயணித்த ம.தி.மு.க, இடதுசாரிகள் மற்றும் வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் தற்போது தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் உள்ளன.
அதேநேரம் மக்கள் நலக் கூட்டணியின் பிரதான கட்சியாக இருந்த தே.மு.தி.க, அ.தி.மு.க. கூட்டணியில் உள்ளது. பா.ம.க தனது கூட்டணி நிலைப்பாட்டை இதுவரை அறிவிக்கவில்லை. அந்தக் கட்சி நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க தமிழ்நாட்டில் அரசியலும், ஆன்மிகமும் கலக்காது: உதயநிதி ஸ்டாலின்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com