Anbil Mahesh: மத்திய அரசை ஓட ஓட விரட்டியவர் மு.க. ஸ்டாலின் என பெருமிதத்துடன் தெரிவித்தார் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
Anbil Mahesh: மத்திய அரசை ஓட ஓட விரட்டியவர் மு.க. ஸ்டாலின் என பெருமிதத்துடன் தெரிவித்தார் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
Published on: May 17, 2025 at 11:04 pm
சென்னை, மே 17 2025: தமிழக கல்வி அமைச்சர் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த நூலுக்கு தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த நூலின் வெளியிட்டு விழா சென்னையில் இன்று (மே 17 2025) நடந்தது. இதில் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
திராவிட நாடு- மு.க ஸ்டாலின்
விழாவில் கலந்துகொண்ட மு.க. ஸ்டாலின், “இது திராவிட நாடு, காவி நாடு அல்ல. மும்மொழிக் கொள்கையை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இன்று நம் வாழ்க்கை உயர்வுக்கு கல்விதான் அடிப்படை. கல்வி நமது உரிமை என்றார். தொடர்ந்து, கல்வி மாநில பட்டியலுக்கு வர வேண்டும் என்றும் பேசினார்.
கல்வி மாநில பட்டியலுக்கு வர வேண்டும் எனப் பேசிய மு.க. ஸ்டாலின், இதற்கான நடவடிக்மைகயை நாம் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், “மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் நிதி விடுவிக்காத மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்றார்.
மேலும், கல்வியை காவிமயமாக்குவது ஒன்றே மத்திய அரசின் ஒரே குறிக்கோள். புதிய கல்விக் கொள்கை என்ற மத யானை தமிழ்நாட்டை நாசம் செய்யும்” என்றார்.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி புகழாரம்
முன்னதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “உச்ச நீதிமன்றத்தின் மூலமாக மத்திய அரசை ஓட ஓட விரட்டியவர் மு.க. ஸ்டாலின்” என்றார்.
மன்னிப்பு கேட்காத உதயநிதி
தொடர்ந்து சனாதானம் குறித்து துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசிய போது அவருக்கு எதிராக நாடு முழுவதும் வழக்குகள் தொடரப்ட்டன.
இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க மாட்டேன் என அவர் கடைசிவரை உறுதியாக இருந்தார்” என்றும் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புகழாரம் சூட்டினார்.
இதையும் படிங்க : அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியில் ஓ.பி.எஸ்; நயினார் நாகேந்திரன்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com