Udayanidhi Stalin | ஒருவாரம் 10 நாள்களில் துணை முதலமைச்சராக உதயநிதியை அறிவிக்க வாய்ப்புள்ளதாக அமைசசர் தா.மோ அன்பரசன் கூறினார்.
Udayanidhi Stalin | ஒருவாரம் 10 நாள்களில் துணை முதலமைச்சராக உதயநிதியை அறிவிக்க வாய்ப்புள்ளதாக அமைசசர் தா.மோ அன்பரசன் கூறினார்.
Published on: September 19, 2024 at 3:47 pm
Udayanidhi Stalin | தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியை, “10 நாள்களுக்குள் அறிவித்துவிடுவார்கள்” என அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறினார். செய்தியாளர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் தா.மோ. அன்பரசன், “நாளைக்கே கூட உதயநிதியை துணை முதலமைச்சராக அறிவிக்கலாம். எப்படியும் இன்னும் 10 நாள்களில் உறுதியாக அறிவிப்பு வெளியாகிவிடும். நாம் தயாராக இருக்க வேண்டும்” என்றார்.
கடந்த சில நாள்களாகவே உதயநிதியை துணை முதலமைச்சராக அறிவிக்கப்போகிறார் என்ற செய்திகள் வெளியாகிவருகின்றன. கடந்த காலங்களில் இதுபோன்ற கேள்விக்கு சிரித்து பதிலளித்த உதயநிதி, தற்போது இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடிவெடுப்பார் எனக் கூறியுள்ளார்.
முன்னதாக இது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய மு.க ஸ்டாலின், “காலம் கனியவில்லை” என்றார். இந்த நிலையில் உதயநிதி துணை முதலமைச்சராக பொறுப்பேற்க போகிறார் என்ற செய்திகள் மீண்டும் கசியத் தொடங்கியுள்ளன. இதற்கிடையில் அமைச்சர் தா.மோ அன்பரசன் இவ்வாறு பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க ‘தமிழ்நாட்டில் பெரியாரை மீறி அரசியல் செய்ய முடியாது’: உதயநிதி ஸ்டாலின்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com