சென்னை, ஜூன் 22 2025: ம.தி.மு.க. பொதுக்குழுவில், அதிக தொகுதிகளில் கட்சி போட்டியிடுவது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 31ஆவது பொதுக்குழு, இன்று (22.06.2025) காலை 10 மணி அளவில் ஈரோடு, பெருந்துறை சாலையில் உள்ள பரிமளம் மஹாலில், அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்தப் பொழுக்குழவில், ம.தி.மு.க. கழகப் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சி.ஏ.சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அதிக தொகுதிகளில் போட்டி தீர்மானம்
அப்போது 3வது தீர்மானமாக அதிக இடங்களில் போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டது. அந்த 3வது தீர்மானத்தில், “மறுமலர்ச்சி திமுக உதயமானதிலிருந்து 1996, 2001, 2006, 2016, 2021 ஆகிய ஐந்து சட்டமன்ற தேர்தல்களிலும், 1996, 1998, 1999, 2004, 2009, 2014, 2019, 2024 ஆகிய எட்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் களம் கண்டிருக்கிறது.
1997 ஆம் ஆண்டு முதல் 2010 வரையில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக திகழ்ந்தது. எனவே 2026 சட்டப்பேரவை தேர்தலில் கழகம் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கு ஏதுவாக கூடுதல் தொகுதிகளைக் கூட்டணியில் பெற்று போட்டியிட வேண்டும் என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதுதவிர பல்வேறு தீர்மானங்கள் இந்தப் பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டன.
இதையும் படிங்க : பழைய ஓய்வூதியத் திட்டம்: ககன்தீப் சிங் குழு இதுவரை செய்த பணிகள் என்ன? அன்புமணி கேள்வி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்