எல்.ஐ.சி வெப்சைட்டை ஹிந்தியில் மாற்றுவதா? போராட்டம் வெடிக்கும்: எச்சரிக்கிறார் வைகோ!

எல் ஐ சி இணையதளத்தை ஆங்கிலத்தில் மாற்ற வேண்டும்; இல்லாவிட்டால் ஹிந்தி பேசாத மாநிலங்களில் போராட்டம் வெடிக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.

Published on: November 19, 2024 at 4:31 pm

Vaiko warns Centre | பாரதிய ஜனதா கட்சி மூர்க்கத்தனமான இந்தி திணிப்பை நடத்தி வருவதாக வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி, பத்தாண்டு காலத்தில் மூர்க்கத்தனமான இந்தி திணிப்பை நடத்தி வருகிறது.

தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி சமஸ்கிருதத்தைத் திணிப்பதற்கு கட்டாயப்படுத்தப்படுகிறது. வானொலி ,தொலைக்காட்சிகளில் இந்தி மயம், இந்திய அரசின் திட்டங்களுக்கு இந்தி, சமஸ்கிருதத்தில் பெயர், குற்றவியல் சட்டங்களை மாற்றி இந்தி, சமஸ்கிருதம் திணிப்பு என்று பல வகைகளில் ஒன்றிய பாஜக அரசு இந்தி மொழியை வலுக்கட்டாயமாக புகுத்தி வருகிறது.

ஒன்றிய அரசு அலுவலகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் இந்தியை அலுவல் மொழியாக வலுக்கட்டாயமாக திணிக்கும் வகையில் அதற்கென்று தனியாக இந்தி ஆட்சி மொழிப் பிரிவு ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒன்றிய அரசு அலுவலகக் கோப்புகள், கடிதத் தொடர்புகள் அனைத்தும் இந்தி மொழியில் இருப்பதை இந்தி மொழிப் பிரிவு கவனிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது போல ஒன்றிய அரசின் சமூக ஊடகங்களில் முழுதாக இந்தி மொழிதான் காட்சியளிக்கிறது.

இந்நிலையில், கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி இணையதளத்தை முழுமையாக இந்தியில் மாற்றி அமைத்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது. காப்பீட்டுத் துறையில் மக்கள் பயன்பாட்டுக்கு உரிய முறையில் அனைத்து மாநில மொழிகளிலும் எல்.ஐ.சி இணையதளம் இயங்கினால்தான் நன்மை தருவதாக இருக்கும்.

ஆனால் ஒன்றிய பாஜக அரசு, இந்தி மொழியில் எல்ஐசி இணையதளத்தை மாற்றியதன் மூலம் இந்தி பேசாத மாநில மக்களுக்கு பச்சை துரோகம் இழைத்திருப்பது கண்கூடாக தெரிகிறது. தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தி பேசாத மாநிலங்கள் அனைத்தும் ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்புக்கு எதிராகப் போராடும் நிலை ஏற்படும்.

எனவே இந்தி மொழியில்  வடிவமைக்கப்பட்டுள்ள எல்.ஐ.சி இணையதளத்தை முன்பிருந்ததைப் போல ஆங்கில மொழியில் உடனடியாக மாற்ற வேண்டும் என்று ஒன்றிய அரசை   வலியுறுத்துகிறேன். என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க டிச. 3 உள்ளூர் விடுமுறை ; குமரி மக்களே நோட் பண்ணுங்க

மஸ்கட் போறீங்களா.. விமான சேவையில் மாற்றம்..உடனே செக் பண்ணுங்க An Air India Express IX aircraft was forced to land in Kerala due to a technical snag.

மஸ்கட் போறீங்களா.. விமான சேவையில் மாற்றம்..உடனே செக் பண்ணுங்க

Air India Express flights cancel: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மஸ்கட் மற்றும் சென்னை, திருச்சி இடையேயான விமான சேவைகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது….

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் EVKS Elangovan Passes away

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்….

குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை ; ஊட்டியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் Security arrangements tightened in Ooty ahead of President's visit to Tamil Nadu

குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை ; ஊட்டியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு ஊட்டியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com