Man arrested for snatching chain: திசையன்விளையில் ஆசிரியையிடம் தங்கச் சங்கிலி பறித்த திருடன் போலீசாரால் விரைந்து கைது செய்யப்பட்டார்.
Man arrested for snatching chain: திசையன்விளையில் ஆசிரியையிடம் தங்கச் சங்கிலி பறித்த திருடன் போலீசாரால் விரைந்து கைது செய்யப்பட்டார்.
Published on: June 24, 2025 at 9:38 am
திசையன்விளை, ஜூன் 24 2025: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை உலக ரட்சகர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் 49 வயதான சித்ரா. இவரின் கணவர் துரை (54) ஃபைனான்ஸ் தொழில் செய்துவருகிறார்.
இந்த நிலையில், சித்ராவின் கணவரும்- மகளும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22 2025) உலக ரட்சகர் தேவாலயத்துக்கு பிரார்த்தனை செய்ய சென்றுள்ளனர். பின்னால், ஆசிரியை சித்ரா சென்றுள்ளார். சித்ரா, உலக ரட்சகர் ஆலயப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் சித்ரா கழுத்தில் கிடந்த 11 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு சென்றுவிட்டார். அவர் பைக், உடன்குடி சாலையில் பயணித்துள்ளது. தொடர்ந்து, இது குறித்து சம்பவம் அறிந்ததும், வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் மற்றும் இன்ஸ்பெக்டர் சீதாலெட்சுமி ஆகியோர் சம்பவ பகுதியில் விசாரணை நடத்தினார்கள். மேலும், திசையன்விளை போலீசாரும் சம்பவ பகுதியில் விரைந்து விசாரணை நடத்தினார்கள்.
இந்த நிலையில், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த அலெக்ஸ் ராஜன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து நகையை மீட்ட போலீசார் அவரிடம் இருந்த பைக்-ஐயும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க மாம்பழங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை.. தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com