Madras High Court: கடற்கரை என்பது ரசிப்பதற்காக தான் என்ற கருத்தை முன்வைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
Madras High Court: கடற்கரை என்பது ரசிப்பதற்காக தான் என்ற கருத்தை முன்வைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

Published on: January 2, 2026 at 7:52 pm
சென்னை, ஜன 2, 2025; கடற்கரை என்பது ரசிப்பதற்காக தான் என்ற கருத்தை முன் வைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அமைந்துள்ளது. இந்த உழைப்பாளர் சிலைக்கு பின்னால் சில கடைகள் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கடைகளை அகற்ற உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
எனினும் உழைப்பாளர் சிலைக்கு பின்புறம் உள்ள கடைகள் இதுவரை அகற்றப்படவில்லை; இந்தக் கடைகள் அகற்றப்பட வேண்டும் எனவும் சென்னை மெரினா கடற்கரையில் நிரந்தரமாக பெரிய கட்டடங்கள் எதுவும் அமைக்க கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கடற்கரை என்பது ரசிப்பதற்காக தான் என்ற கருத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன் வைத்தனர்.
மேலும் சென்னை உழைப்பாளர் சிலை பின்புறம் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
தொடர்ந்து நீதிபதிகள் தங்களது உத்தரவில், ” சென்னை மெரினா கடற்கரையில் உணவு, பொம்மை மற்றும் பேன்சி கடைகளைத் தவிர மற்ற கடைகளை அமைக்க கூடாது” எனவும் தங்களது உத்தரவில் குறிப்பிட்டனர்.
இதையும் படிங்க; கலைத்துறையினர் பொறுப்புடன் படங்களை உருவாக்க வேண்டும்.. மு.க ஸ்டாலின்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com